மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1639 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1639 days ago
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். 2019ம் ஆண்டு ஜூலை 22ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. வினோத்பாபு, தேஜஸ்வினி, லதா, நளினி, சுபலட்சுமி, அஸ்வந்த் திலக், சஹானா ஷெட்டி, சீதா அனில், பிரியங்கா உள்பட பலர் நடிக்கிறார்கள். அருண் மோகன், அப்துல் கபீஸ் இயக்குகிறார்கள்.
இது இரண்டு கூட்டு குடும்பங்களின் கதை. இரண்டு குடும்பமும் பகை குடும்பங்கள். ஆனால் பழைய பகை தெரியாமலேயே ஒரு குடும்பத்தை சேர்ந்த ஹீரோவும், இன்னொரு குடும்பத்தை சேர்ந்த ஹீரோயினும் காதலிப்பார்கள். திருமணம் செய்ய இருக்கும் நேரத்தில் பழைய பகை தெரிய வர அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் சீரியலின் கதை.
இப்போது இந்த சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இரு குடும்பமும் இதுவரை நடந்த பல பிரச்சினைகளே பேசி தீர்த்து ஒற்றுமையாகி விட்டார்கள். இதனால் இன்னும் ஒரு சில எபிசோட்களுடன் இந்த தொடர் முடிவுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த தொடரில் நடித்த அனைவரும் ஒன்றாக சேர்ந்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த குரூப் போட்டோக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
1639 days ago
1639 days ago