விக்ரம் 60 படத்தில் இணைந்த பிரபல நடிகை
ADDED : 1751 days ago
ஜகமே தந்திரம் படத்தை அடுத்து விக்ரம்-துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. செவன்த் ஸ்கீரின்ஸ் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதை ஒரு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்திய படக்குழு, இன்றைய தினம் விக்ரம் -60 படத்தில் வாணி போஜன் நடிப்பதையும் ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.