துல்கரின் பெயரை வெளியிட்ட சல்யூட் படக்குழு
ADDED : 1713 days ago
துல்கர் சல்மான் மலையாளத்தில் தற்போது முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான், இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்திற்கு சல்யூட் என டைட்டில் வைத்து சமீபத்தில் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.
இந்தநிலையில் தற்போது துல்கர் சல்மானின் போலீஸ் கெட்டப்பில் செகன்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப்படத்தில் அரவிந்த் கருணாகரன் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் துல்கர் சல்மான் நடிக்கிறார் என்பதையும் அறிவித்துள்ளனர். இந்தப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார் துல்கர் சல்மான்..