கொற்றவை படப்பிடிப்பை முடித்த சி.வி.குமார்
ADDED : 1666 days ago
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது, திறமையான இயக்குனர்களை, நடிகர்களை அறிமுகப்படுத்துவது என ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம்வந்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் சந்தீப் கிஷன் நடித்த 'மாயவன்' படம் மூலம் இயக்குனராகவும் மாறினார்.. இதனை தொடர்ந்து 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவதாக 'கொற்றவை' என்கிற படத்த இயக்கி வருகிறார்.
புதையலை தேடிச்செல்வதை மையப்படுத்தி, பிக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் கனகசபாபதி, வேலா ராமமூர்த்தி, அனுபமா குமார் ஆகியோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தநிலையில் தற்போது கொற்றவை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் சி.வி.குமார்.