கிரைம் கதையில் இயக்குனர் சுந்தர்.சி
ADDED : 1713 days ago
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பயணித்து வரும் சுந்தர்.சி தற்போது அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். அடுத்து, கட்டப்பாவ காணோம் படத்தை இயக்கி மணி செயோன் இயக்கும் புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கிறார். ஹெபா படேல், சாந்தினி நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் அபிராமி வெங்கடாசலம், ஜெயகுமார், முருகதாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசை. கிரைம் கதையாக உருவாகும் இப்படத்திற்கு பெயர் சூட்டவில்லை. பூஜையுடன் இன்று(மார்ச் 15) படப்பிடிப்பு துவங்கியது. வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக மணிகண்ட ராமன் இப்படத்தை தயாரிக்கிறார்.