உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவர்ச்சியை விரும்பாத டாப்சி

கவர்ச்சியை விரும்பாத டாப்சி

தென்னிந்திய படங்கள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் டாப்சி. சமீபத்தில் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கினார். இவர் அளித்த ஒரு பேட்டியில், ''சினிமாவில் அறிமுகமான புதிதில் நிறைய படங்களில் நடித்ததால் என் மீது கவர்ச்சி பொம்மை என்ற முத்திரை விழுந்தது. என் திறமைக்கு இப்படி நடிப்பது சரியல்லை என புரிந்தது. கதாநாயகி என்பதை விட நல்ல நடிகைக்கான வாய்ப்பு வந்தால் போதும் என உணர்ந்தேன். ஆனால் தென்னிந்திய மொழிகளில் என் கனவு நிறைவேறவில்லை. ஹிந்தியில் முயற்சித்தேன். இப்போது என் மீது இருந்த கவர்ச்சி முத்திரையை நீக்கிவிட்டேன். இப்போது கடினமான வேடம் என்றாலும் அதற்காக என்னை மாற்ற தயாராகிவிட்டேன் என்கிறார் டாப்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !