உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆமீர்கான் படத்தில் நாகசைதன்யா

ஆமீர்கான் படத்தில் நாகசைதன்யா

ஹிந்தியில் ஆமீர்கான் தற்போது 'லால் சிங் சத்தா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அவரே தயாரிக்கும் இந்தப்படத்தை அத்வைத் சந்தன் என்பவர் இயக்கி வருகிறார். கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியும் நடிப்பதற்காக பேசப்பட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்தப்படத்தில் இருந்து விலகினார் விஜய்சேதுபதி.

இந்தநிலையில் தற்போது விஜய்சேதுபதிக்கு பதிலாக, இந்தப்படத்தில் தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யா நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் அமீர்கான், நாகசைதன்யா இருவருமே ராணுவ வீரர்களாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !