கொரோனா விதி மீறல்: பாலிவுட் நடிகை மீது வழக்கு
பிரபல பாலிவுட் நடிகை கவுஹர் கான். மென் அட் ஒர்க், ஒன்ஸ் அபான்ய டைம் மும்பை, கேம், பீவர், பேகம் ஜான், சேல்ஸ் மேன் ஆப்தி ஈயர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்பாளராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது கவுஹர் கானுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றை உறுதி செய்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவரிடம் வெளியில் செல்ல மாட்டேன் என்ற உறுதிமொழி எழுதி வாங்கி இருந்தனர். இதையும் மீறி கொரோனா தொற்று குணமாகத நிலையில் கவுஹர் கான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் அவர் மீது கொரோனா விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் கொரோனா தொற்று இல்லை என்ற உறுதி செய்த பிறகே அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்று கவுஹர்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.