லோகேஷ் கனகராஜ் பிறந்த நாள் : முன்னணி இயக்குனர்கள் நேரில் வாழ்த்து
ADDED : 1710 days ago
இன்றைய தேதியில் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பெரிய ஹீரோக்கள் இவரது தேதிக்காக காத்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் வெற்றியே அதற்கு காரணம்.
தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து மீண்டும் விஜய்யை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தனது 35வது பிறந்த நாளை தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார். இயக்குனர் ஷங்கர், மணிரத்னம், கவுதம் மேனன், சசி, வசந்தபாலன், லிங்குசாமி உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜை நேரில் சந்தித்து கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.