'ரஜினி'க்காக மீண்டும் இணைந்த 'வாத்தியார்' கூட்டணி
ADDED : 1670 days ago
கடந்த 2006 ம் ஆண்டு அர்ஜூன் ஹீரோவாக நடித்த படம் வாத்தியார். ஏ.வெங்கடேஷ் இயக்கி இருந்த இப்படத்தை பழனிவேல் தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்குப் பின், ஏ.வெங்கடேஷும், பழனிவேலும் சேர்ந்து பணிபுரிய வில்லை.
இந்நிலையில், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து புதிய படத்தை உருவாக்குகின்றனர். இந்தப் படத்திற்கு ரஜினி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகனாக விஜய் சத்யா நடிக்க, மனோ நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரஜினி படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளனர்.