அந்தகனில் இணைந்த பிரியா ஆனந்த்
ADDED : 1764 days ago
அந்தாதூன் தமிழ் ரீ-மேக்கான அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த். இவரின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் பிரசாந்த் உடன் சிம்ரன் நடிக்கிறார். கார்த்திக், பிரபு, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இப்போது இன்னொரு நாயகியாக பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். ஹிந்தியில் ராதிகா ஆப்தே நடித்த வேடத்தில் இவர் நடிக்கிறார்.