கிஷோர் நடிக்கும் “ராஜாவுக்கு ராஜாடா”
ADDED : 1703 days ago
ஹீரோ, வில்லன், குணசித்திரம் என எந்தவொரு கதாப்பாத்திரமானாலும் அதில் அசத்துபவர் நடிகர் கிஷோர். தற்போது அறிமுக இயக்குநர் திரவ் இயக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், தனன்யா, ஜஷ்வந்த் மணிகண்டன், கண்ணன் பாரதி, பிரபாகரன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். சங்கர் ரங்கராஜன் இசை
படம் பற்றி இயக்குநர் திரவ் கூறுகையில், “ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் முழுக்க முழுக்க உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படும் படமாகும். இதன் அடிநாதம் அன்பு மட்டுமே அண்டம் தேடும் என்பதாகும். இப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அவரின் வாழ்க்கையின் ஏதாவதொரு பிரதிபலிப்பை படத்தில் கண்டிப்பாக காண்பார்கள் என்கிறார்.