திருப்புமுனை தந்த இயக்குனருக்கு நன்றி சொன்ன தமன்னா!
ADDED : 1664 days ago
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா. இவரது இயக்கத்தில் நடித்த ஹேப்பி டேஸ் என்ற படம் சூப்பர் ஹிட்டாகி தமன்னாவிற்கு முதல் திருப்புமுனை படமாக அமைந்தது. அதன்பிறகு சேகர் கம்முலா இயக்கிய படங்களில் தமன்னா நடிக்கவில்லை.
தற்போது நாகசைதன்யா-சாய் பல்லவி நடிப்பில் லவ் ஸ்டோரி என்ற படத்தை இயக்கியுள்ள சேகர் கம்முலா ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுயோவில் அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சேகர் கம்முலாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். தமன்னா. அதில், எனது வாழ்க்கையில் இனிய நாட்களை கொண்டு வந்தவர். தற்போது அவர் இயக்கி வரும் லவ் ஸ்டோரி படத்தை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.