ஆட்டோவில் வலம் வந்த அஜித் : வைரலான வீடியோ
ADDED : 1664 days ago
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. ஒரேயொரு சண்டை காட்சி மட்டுமே பேலன்ஸ் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பல மாதங்களாக வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் நச்சரித்து வந்த நிலையில், அவரது 50ஆவது பிறந்த நாளான மே 1ல் முதல் வலிமை அப்டேட் வரும் என்று சமீபத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் ஒரு தகவல் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகமாக்கினார்.
சில வாரங்களுக்கு முன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் பங்கேற்பதற்காக வாடகை காரில் வந்தவர், வழிமாறி வேறு ஒரு இடத்திற்கு சென்றார். அதையடுத்து அவர் மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றார். இந்நிலையில் இப்போது வாடகை ஆட்டோ ஒன்றில் அஜித் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்க் அணிந்தநிலையில் அந்த ஆட்டோவில் பயணிக்கிறார் அஜித். யாரோ ரசிகர் ஒருவர் அதை மொபைலில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.