அருண் விஜய் படப்பிடிப்பில் ஒருவருக்கு கொரோனா - இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி!
ADDED : 1663 days ago
அருண் விஜய்யின் 33ஆவது படத்தை தற்போது இயக்கி வருகிறார் ஹரி. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பழனி அருகில் உள்ள நெய்க்காரப்பட்டியில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் இயக்குனர் ஹரி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. இருப்பினும், அப்படக்குழுவில் இருந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அருண் விஜய் 33 படக்குழுவில் பணியாற்றிய அனைவருக்குமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.