ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் வலிமை படக்குழு
ADDED : 1706 days ago
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். ஹூமா குரேஷி நாயகியாக நடித்து வரும் இப்படத்தில் கார்த்திக்கேயா வில்லனாக நடித்துள்ளார்.
வலிமை என படத்தின் அப்டேட்டை வெளியிட்டதோடு சரி, அதனைத் தொடர்ந்து அப்படம் பற்றிய அப்டேட் எதையும் தராமல் படக்குழு இழுத்தடித்து வருகிறது. இதனால் பார்ப்பவர்களிடம் எல்லாம் வலிமை பட அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர் என்பது ஊரறிந்த விசயம் தான். அவ்வப்போது வலிமை பட அப்டேட் என்ற பெயரில் ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங் ஆகி வருகிறது.
இந்நிலையில் வலிமை படம் பற்றி அசத்தலான அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் அப்படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திக்கேயா. அதாவது வலிமை படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஒன்றை ஸ்பெயின் நாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
ஸ்பெயின் அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்ததும் அந்த சேஸிங் காட்சியைப் படமாக்கி விடுவார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்தப் படப்பிடிப்பு 3 நாட்கள் மட்டும் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.