உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டுவிட்டரில் இணைந்த சுரேஷ்கோபி ; ரசிகர்களுக்கு எச்சரிக்கை

டுவிட்டரில் இணைந்த சுரேஷ்கோபி ; ரசிகர்களுக்கு எச்சரிக்கை

மலையாள சினிமாவின் ஆக்சன் கிங் நடிகராக வலம் வந்த நடிகர் சுரேஷ்கோபி, கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்த அவர் ராஜ்யசபா எம்பி.ஆகவும் மாறினார். அதேசமயம் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமாவை மறக்க முடியாமல் மீண்டும் மலையாள திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். தற்போது பாப்பன், காவல், மற்றும் தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

பல வருடங்களாக முகநூல் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சுரேஷ்கோபி, தற்போது டுவிட்டரிலும் அடியெடுத்து வைத்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் இதுதான் என அறிவித்துள்ள சுரேஷ்கோபி, “என்னுடைய பெயரில் போலியாக இயங்கும் கணக்குகளை பின்தொடரவோ அல்லது அதில் உள்ள செய்திகளை பகிரவோ வேண்டாம் என்றும் ரசிகர்களை எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !