உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேட்ட பட நடிகருக்கு ஆண் குழந்தை

பேட்ட பட நடிகருக்கு ஆண் குழந்தை

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் படத்தில் அறிமுகமானவர் மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகராக வளர்ந்து வரும் மணிகண்ட ஆச்சாரி. மம்முட்டியுடன் தி கிரேட் பாதர் மற்றும் மாமாங்கம் ஆகிய படங்களில் இணைந்து நடித்த இவர், தமிழில் 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் அடியாட்களில் ஒருவராக நடித்தார். தற்போது சீனு ராமசாமியின், 'மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நடித்துள்ளார்.

கடந்த வருடம் ஆரம்பித்த கொரோன தாக்கம் காரணமாக, தனது திருமணத்தை தள்ளிப்போட விரும்பாமல், எளிமையான முறையில் அஞ்சலி என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார் மணிகண்ட ஆச்சாரி. தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தான் அறிமுகமான கம்மட்டிப்பாடம் படத்தில் தனது கதாபாத்திர பெயரான பாலன் என்கிற பெயரை குறிப்பிட்டு தனக்கு மகன் பிறந்துள்ளதை அறிவித்துள்ளார் மணிகண்டன் ஆச்சாரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !