கங்கனா பிறந்தநாளில் தலைவி டிரைலர்
ADDED : 1661 days ago
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி, ‛தலைவி' என்ற பெயரில் இயக்குனர் விஜய் படம் எடுத்துள்ளார். ஜெ.,வாக ஹிந்தி நடிகை கங்கனாவும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இவர்களுடன் பூர்ணா, சமுத்திரகனி உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் முடிந்து ரிலீஸ் வேலை நடந்து வருகிறது. ஏப்., 23ல் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது கங்கனா பிறந்தநாளான மார்ச் 23ல் படத்தின் டிரைலரை் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.