உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா

நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா

ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நிக்கி தம்போலி. ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுப்பற்றி சமூகவலைதளத்தில், ‛‛எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சை எடுத்து வருகிறேன். விரைவில் குணமாகிவிடுவேன். அனைவரின் அன்பு, ஆதரவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் நிக்கி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !