உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதியின் ஹிந்தி படம்

விஜய் சேதுபதியின் ஹிந்தி படம்

தென்னிந்திய படங்களில் ஹீரோ, வில்லன் என மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ஹிந்தியில் மும்பைகார் என்ற படத்தில் அறிமுகமாகிறார். தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான இப்படத்தில் முனீஷ்காந்த் நடித்த வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது மும்பைகார் படத்தில் விஜய் சேதுபதி தோன்றும் ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. அதில் கையில் துப்பாக்கியுடன் கூலிங்கிளாஸ் அணிந்துள்ள அவர் தாடி கெட்டப்பில் காட்சி கொடுக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !