குஷ்புவிற்காக களமிறங்கிய சுந்தர்.சி
ADDED : 1657 days ago
2021 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் தேர்தலில் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகை குஷ்பு. கடந்த சில நாட்களாகவே தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதோடு வயதான பெண்களின் காலைத் தொட்டு வணங்கியும் வாக்கு சேகரிக்கிறார்.
அந்த வகையில் குஷ்பு பிரச்சாரத்திற்கு செல்லும் பகுதிகளில் எல்லாம் பாஜகவினர் மட்டுமின்றி அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களும் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில், இதுவரை அரசியல் களத்திற்குள் வராமல் இருந்த குஷ்புவின் கணவரான டைரக்டர் சுந்தர்.சியும் இன்றைய தினம் குஷ்புவிற்காக ஆயிரம் விளக்கு தொகுதிகளில் மக்களை சந்தித்து, மனைவிக்காக வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.