வக்கீல்சாப் டப்பிங் : பவன் கல்யாண் தீவிரம்
ADDED : 1770 days ago
ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான படம் பிங்க். இப்படத்தின் தமிழ்ப்பதிப்பை நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் எச்.வினோத் இயக்க, அஜித் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் வக்கீல்சாப் என்ற பெயரில் பவன்கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ளது. அவருடன் ஸ்ருதிஹாசன், அஞ்சலி, நிவேதா தாமஸ், அனன்யா, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வேணு ஸ்ரீராம் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கும் நிலையில் இன்றைய தினம் பவன் கல்யாண் தனக்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கிறார். இப்படம் ஏப்ரல் 9-ந்தேதி திரைக்கு வருகிறது. மூன்று ஆண்டு இடைவேளைக்குப்பின் பவன் கல்யாணின் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.