ரவி தேஜாவிற்கு ஜோடியான ஐஸ்வர்யா மேனன்
ADDED : 1670 days ago
தமிழில் வீரா, தமிழ்ப்படம் 2, நான் சிரித்தால் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தவருக்கு தற்போது ரவிதேஜா நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்ததகவலை இணையபக்கத்தில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன். மேலும், ரவிதேஜா நாயகனாக நடிக்கும் இந்த படத்தை நகினா திரிநாதராவ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் மட்டுமின்றி ஸ்ரீலீலா என்பவர் இன்னொரு நாயகியாகவும் நடிக்கிறார். படப்பிடிப்பு கோடை விடுமுறையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.