உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் வெங்கடேஷ் திடீர் மரணம் : சின்னத்திரையுலகம் அதிர்ச்சி

நடிகர் வெங்கடேஷ் திடீர் மரணம் : சின்னத்திரையுலகம் அதிர்ச்சி

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ். சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் குணசித்ர கேரக்டரில் நடித்திருக்கிறார். சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் ரச்சிதா மஹாலக்ஷ்மிக்கு அப்பாவாக நடித்து பிரபலமானார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு அப்பாவாகவும், ஈரமான ரோஜாவே தொடரிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் வெங்கடேஷ் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். எந்த வித உடல்நல பிரச்சினையும் இல்லாமல் இருந்த வெங்கடேஷின் திடீர் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 55 வயதான அவருக்கு பாமா என்ற மனைவியும், நிவேதா என்ற மகளும், தேவானந்த் என்ற மகனும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !