உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மருத்துவர் ஆனார் சூப்பர் சிங்கர் பிரியங்கா

மருத்துவர் ஆனார் சூப்பர் சிங்கர் பிரியங்கா

விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் பிரியங்கா. சில புள்ளிகள் வித்தியாத்தில் டைட்டிலை தவறவிட்டாலும் அந்த நிகழ்ச்சியில் நட்சத்திர பாடகியாக வலம் வந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் பாடல்கள் பாடி வெளியிட்டு வந்தார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் இசையில் சினிமாவிலும் பாடிவிட்டார். தற்போது மருத்துவராகவும் ஆகிவிட்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்போதே அவர் தான் பல் மருத்துவம் படித்து வருவதாக தெரிவித்திருந்தார். இப்போது படிப்பை முடித்து முறைப்படி மருத்துவராகி விட்டார்.

மருத்துவ சேசையில் ஒரு நாள் என்ற தலைப்பில் தனது கிளினிக்கில் எடுத்த படங்களை வெளியிட்டிருக்கிறார். இசையிலும், மருத்துவத்திலும் இணைந்து பயணிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !