உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'மாநாடு'

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'மாநாடு'

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றது. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.

இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான மாநாடு அரங்கம் ஒன்று கடந்த ஒரு வார காலமாக அமைக்கப்பட்டு வந்தது. அந்த வேலைகள் முடிவடைந்து இன்று அல்லது நாளை அங்கு கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இதில் படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இப்படத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து சிம்பு நடித்து வருவதாகச் சொல்கிறார்கள். கொரோனா காலத்திலும் படப்பிடிப்புக்குத் தவறாமல் வருகை தந்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது 'மாநாடு'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !