உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுல்தான் படத்திற்கு யுஏ சான்று

சுல்தான் படத்திற்கு யுஏ சான்று

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள படம் சுல்தான். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையமைக்க, பாடல்களுக்கு விவேக் மெர்வினும் இசையமைத்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு இணையாக இப்படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் அதிகப்படியான தியேட்டர்களில் இப்படத்தை ஏப்ரல் 2-ந்தேதி வெளியிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சுல்தான் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாக படநிறுவனம் டுவிட்டரில் தெரி வித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !