உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சார்பட்டா பரம்பரையில் யார் யார் என்ன பாத்திரம்

சார்பட்டா பரம்பரையில் யார் யார் என்ன பாத்திரம்

ஆர்யா வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி உள்ளார் பா.ரஞ்சித். இதில் துஷாரா, கலையரசன், பசுபதி, டைகர் தங்கத்துரை உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் 1980களில் வடசென்னையை பின்னணியாக கொண்டு நடந்த குத்துச்சண்டையை மையப்படுத்திய கதையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்காக பல மாதங்களாக பயிற்சி எடுத்து நடித்தார் ஆர்யா. இவர் மட்டுமல்ல இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் உரிய பயிற்சி பெற்ற பின்னரே நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் என்ன மாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறார்கள் என்பதை கூறும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஒவ்வொருவரும் அந்த கேரக்டரில் பாத்திரத்தின் பெயர் உடன் அதில் அவர்கள் நடிக்க எப்படி தயார் ஆனார்கள் என்பதையும் அந்த வீடியோவில் காண்பித்துள்ளார் பா.ரஞ்சித். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !