ஹீரோவாகும் காமெடி நடிகர் சதீஷ்?
ADDED : 1653 days ago
தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் உருவெடுத்துள்ளனர். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு என பலரும் ஹீரோவாகவும் நடித்துள்ளனர். இவர்களது வரிசையில் காமெடி நடிகர் சதீஷும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களில் காமெடியனாக நடிப்பவர் அடுத்து, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.