உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வசூலில் சாதனை படைக்கும் ஜதி ரத்னலு

வசூலில் சாதனை படைக்கும் ஜதி ரத்னலு

நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தயாரித்துள்ள தெலுங்கு படம் ஜதி ரத்னலு. புதுமுக இயக்குனர் அனுதீப் இயக்கி உள்ளார். நவீன் போலிஷெட்டி, ப்ரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கடந்த மார்ச் 11ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

சுமார் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 70 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அமெரிக்காவில் திரையிடப்பட்டு இதுவரை ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்திருக்கும் இந்தியத் திரைப்படமாக ஜதி ரத்னலு கொண்டாடப்படுகிறது.

இந்த படம் முழுநீள காமெடி படமாகும். கொரோனா காலத்திற்கு பிறகு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தியேட்டரில் வெளியிடப்பட்ட உப்பென்னா, ஜதி ரத்னாலு படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது தெலுங்கு திரையுலகை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்த படங்களின் பிறமொழி ரீமேக்கிற்கு கடும் போட்டி நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !