மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1646 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1646 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1646 days ago
விஜய்சேதுபதி இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திண்டுக்கல், மதுரை, பழனி பகுதியில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.
இந்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க திருமண மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்து புகார் வந்ததை தொடர்ந்து பழனி சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் படப்பிடிப்பு தளத்திறகு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முக கவசம் அணியாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதே படக்குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தியபோது அபராதம் கட்டினர்.
1646 days ago
1646 days ago
1646 days ago