மாலை 5 மணிக்கே அழைக்கிறது : மது கிளாஸ் உடன் மாளவிகா மோகனன்
மலையாளம், கன்னடத்தில் நடித்து விட்டு பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவார். இன்ஸ்ட்ராகிராமில் 2 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு கூட இவர் பதிவிட்ட கவர்ச்சி போட்டோவிற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்தது.
இந்த நிலையில் தற்போது மாளவிகா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தான் உயர் ரக மது அருந்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, மாலை 5 மணிக்கு கார்டன் அண்ட் டானிக் (ஜின் வகை மது) புத்துணர்ச்சியூட்ட அழைக்கிறது என்று பதிவிட்டுள்ளார். சிலர் இதை ஆதரித்தும், என்னம்மா இப்படி பண்றீங்ளேம்மா என்கிற அளவுக்கு விமர்சித்தும் வருகிறார்கள்.