சந்தானம் பட நடிகையின் குடும்பத்திற்கே கொரோனா
                                ADDED :  1679 days ago     
                            
                             சந்தானம் நடித்த ‛சக்க போடு ராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வைபவி சாண்டில்யா. இப்போதும் சில படங்களில் நடிக்கிறார். இவர் மட்டுமல்லாது இவரது குடும்பமும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளது.
வைபவி பதிவிட்ட வீடியோவில், ‛‛கடந்த புதன்கிழமை லேசான காய்ச்சல், உடல்வலி, அதிக சோர்வு இருந்தது. கொரோனா பரிசோதனை செய்தேன். நெகட்டிவ் என வந்தது. ஆரம்பக்கட்டம் என்பதால் நெகட்டிவ் என வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து வறட்டு இருமல் இருந்ததால் மூன்று தினங்களுக்கு முன் மீண்டும் பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என வந்ததது. எனக்குமட்டுமல்லாது அம்மா, அப்பாவுக்கும் இந்நோய் தொற்று உள்ளது. அனைவரும் நலமாக உள்ளோம்'' என தெரிவித்துள்ளார்.