ரஜினிக்கு 100 சதவீதம் பொருத்தமான விருது : கமல் வாழ்த்து
ADDED : 1893 days ago
நடிகர் ரஜினிக்கு 2020 ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரஜினிக்கு, கமல் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல் பதிவிட்டுள்ள ட்வீட்டில், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என குறிப்பிட்டுள்ளார்.