ரஜினியை தலைவா என குறிப்பிட்டு மோடி வாழ்த்து
ADDED : 1687 days ago
ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியும் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தலைமுறை தாண்டிய புகழ், ஒரு சிலரால் மட்டுமே முடிந்த உழைப்பு, மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் ஒரு கவர்ச்சியான ஆளுமை. அது தான் ரஜினி.
தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.