காதலருக்கு வாழ்த்து சொன்ன ஸ்ருதிஹாசன்
ADDED : 1645 days ago
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார். சமீபத்தில் தனது காதலருடன் சென்னை வந்த ஸ்ருதி, காதலரை அப்பா கமல்ஹாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
நேற்று சாந்தனுவுக்குப் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்து, “நம்பமுடியாத மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் 'லாபம்' படத்திலும் தெலுங்கில் 'வக்கீல் சாப்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதற்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவரைக் காதலித்து பின்னர் அவரை விட்டு விலகினார் ஸ்ருதிஹாசன்.
அப்பாவின் அரசியல் பிரச்சாரத்திற்கு ஸ்ருதிஹாசன் உதவியாகச் செல்லவில்லை. மாறாக அவருடைய தங்கை அக்ஷராஹாசன் கமல்ஹாசனுடன் கூடவே இருந்து உதவி செய்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.