தொழிலாளர்களுக்கு மணிரத்னம் உதவி, பி.சி.ஸ்ரீராம் நன்றி
ADDED : 1695 days ago
தமிழ்த் திரையுலகம் கடந்த ஒரு வருட காலமாக கொரானோ தொற்று பாதிப்பால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் சரியான வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து ஓடிடி தளத்திற்காக 'நவரசா' என்ற ஆந்தாலஜி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சினிமா தொழிலளார்களுக்கு உதவி செய்ய அளித்துள்ளார்கள்.
அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொழிலளார்களுக்கு இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மாதத்திற்கு 1500 ரூபாய் உதவித் தொகையை வழங்கியுள்ளார்கள். அதன் மூலம் சுமார் அந்த சங்கத்தைச் சேர்ந்த 700 உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள்.
அவர்களின் உதவிக்கு சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம் நன்றி தெரிவித்துள்ளார்.