அஜீத் பற்றி வெளியான திடீர் வதந்தி?
ADDED : 1672 days ago
எச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் நடித்து வரும் அஜீத், அடுத்தபடியாக ஸ்பெயினில் நடைபெற உள்ள ஆக்சன் காட்சிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். அதோடு, மே 1-ந்தேதி அஜீத் பிறந்த நாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மலையாளத்தில் மோகன்லால் இயக்கி நடிக்கும் பரோஸ் என்ற 3டி படத்தில் அஜீத் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாதபோதும் சோசியல் மீடியாவில் இந்த செய்தி வைரலாகி வந்தது. ஆனால் இன்றைய தினம் அந்த செய்தி வதந்தி என்று பரோஸ் படக்குழு அறிவித்திருக்கிறது.
மேலும், இந்த பரோஸ் படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், பிரதாப்போத்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லிடியான் நாதஸ்வரன் என்ற 15 வயது சிறுவன் இசையமைக்கிறார்.