உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தியில் வெளியாகும் சூர்யா படம்

ஹிந்தியில் வெளியாகும் சூர்யா படம்

சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்தின் வெற்றிதான் அதையடுத்து பல தயாரிப்பாளர் களுக்கு நம்பிக்கை கொடுக்க தங்களது படங்களையும் ஓடிடி தளங்களில் வெளியிடத் தொடங்கினார்கள்.


மேலும், சூரரைப்போற்று படத்தை தென்னிந்திய மொழிகளில் வெளியிட்டபோதும் ஹிந்தியில் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது சூரரைப்போற்று படத்தை ஹிந்தி யில் டப் செய்துள்ளனர். ஏப்ரல் 4-ந்தேதி அமேசானில் சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி பதிப்பும் வெளியாக உள்ளது.

விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என வெளியிட்டு பான் இந்தியா படமாக்கியது போல், இப்போது சூர்யாவின் சூரரைப்போற்று படத்தையும் ஐந்து மொழிகளில் வெளியிட்டு பான் இந்தியா படமாக்கியிருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !