உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரையும் அறிமுகம் செய்கிறார் கரன் ஜோஹர்

ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரையும் அறிமுகம் செய்கிறார் கரன் ஜோஹர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் 2018ஆம் ஆண்டில் தடாக் என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து ரூஹி என்ற ஹாரர் படத்தில் நடித்தவர், கோஸ்ட் ஸ்டோரிஸ், தி கர்ஜில் கேர்ள் போன்ற வெப் சீரியல்களிலும் நடித்தார். தற்போது குட்லக் ஜெர்ரி என்ற ஹிந்தி படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.



இந்நிலையில், ஜான்வி கபூரை அறிமுகம் செய்த அதே கரண் ஜோஹர் விரைவில் ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூரையும் தனது பேனரிலேயே ஒரு ஹிந்தி படத்தில் அறிமுகம் செய்யப்போகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், தற்போது குஷிகபூர், அமெரிக்காவில் நடிப்பு சம்பந்தமாக படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !