சுல்தான் பற்றி கார்த்தி வெளியிட்ட தகவல்
ADDED : 1695 days ago
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி நடித்து வெளியான சிறுத்தை படத்தைப்போலவே சுல்தானும் ஒரு மசாலாப்படம் என்று தெரிவித்திருந்தார்.
அதையடுத்து இப்போது சுல்தான் பட நாயகனாக கார்த்தியும் அப்படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். நான் ஒவ்வொரு கதைகளையும் தேர்வு செய்யும்போது எல்லா வகையிலும் ஆராய்வேன். அந்த வகையில் நான் நடித்த கைதி ஒரு வித்தியாசமான அதிரடி திரில்லர். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஒரு காவிய நாடகம். ஆனால் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வரும் சுல்தான் ஒரு மசாலா பொழுதுபோக்கு படம். இது எல்லாதரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.