உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்ன ஒரு அழகான உணர்வு! - மீனா டுவீட்

என்ன ஒரு அழகான உணர்வு! - மீனா டுவீட்

ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்த மீனா அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்தார். இந்தநிலையில் தெலுங்கு ரீமேக்கி லும் வெங்கடேசுடன் இணைந்து நடித்தவர் தற்போது திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேசுடன் இணைந்து நடித்து வருகிறார்.


மேலும், இதுவரை ஆந்திராவில் நடைபெற்று வந்த அப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கேரளாவில் தொடங்கியிருக்கிறது. அதையடுத்து மீனா டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். மலையாளத்தில் நடித்த அதே வேடத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. இன்று நடிக்கும் இந்த காட்சிகளை ஏற்கனவே நடித்த அந்த நாளை நான் நினைவில் கொள்கிறேன். மனசுக்கு பிடித்த காட்சிகளை மீண்டும் செய்யும்போது என்ன ஒரு அழகான உணர்வு -என்று பதிவிட்டுள்ளார் மீனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !