'அம்மா' நிதி'க்காக தயாராகும் படம் ; இயக்குனர் மாற்றம் ?
ADDED : 1695 days ago
கடந்த 2008ஆம் வருடம் மலையாளத்தில் 'ட்வெண்ட்டி-2௦' என்கிற படம் வெளியானது அந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கினார் மலையாள சினிமா வரலாற்றில் மிகமிக முக்கியமான படம் அது.. மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வுக்கு நிதி திரட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அந்தப்படத்தில் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் ஏதாவது ஒரு ரோலிலாவது நடித்திருந்தனர்.
தற்போது அதேபோல மீண்டும் ஒரு படத்தை தங்களது சங்கத்திற்காக நிதி திரட்டும் விதமாக அம்மா தயாரிக்க இருக்கிறது. இந்தப்படத்தை இயக்குனர்கள் பிரியதர்ஷன் மற்றும் டி.கே.ராஜீவ்குமார் ஆகியோர் இணைந்து இயக்குவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் சில காரணங்களால் இந்த இருவரும் விலகிக்கொண்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த புலி முருகன் படத்தை இயக்கிய வைசாக் தான் இந்தப்படத்தை இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.