ரெமோ படத்தை விட சுல்தான் பெரிதாக வெற்றி பெறட்டும் : சிவகார்த்திகேயன் வாழ்த்து
ADDED : 1649 days ago
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் இயக்குனரானவர் பாக்யராஜ் கண்ணன். அதையடுத்து கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு என பலர் நடித்துள்ள சுல்தான் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இன்று திரைக்கு வந்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி இன்று அதிகாலை சென்னை பாடியில் உள்ள கிரீன் திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது கார்த்தியும் ரசிகர்களோடு அமர்ந்து சுல்தான் படத்தை பார்த்து ரசித்தார்.
இந்த நிலையில் சுல்தான் படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள். சுல்தான் படம் ரெமோவை விட பெரிய அளவில் வெற்றி பெறட்டும். கார்த்தி, ராஷ்மிகா, தயாரிப்பாளர் பிரபு ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.