திருமணம் பற்றி ரசிகர்களிடம் கேட்கும் ரைசா
ADDED : 1650 days ago
நடிகை ரைசா வில்சனுக்கு சமூகவலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் அவர் எப்போதும் சமூகவலைதளங்களில் தான் உலவிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாபக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருக்கிறார்.
அதில் இவரை நான் திருமணம் செய்துகொள்ளலாமா? என ரசிகர்களிடம் ரைசா கேட்டுள்ளார். அதாவது 45 நாய்களை தத்தெடுத்து, அவைகளுக்காக 4 ஏக்கர் நிலத்தை வாங்கி விளையாடவிட்ட மனிதரை தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார் ரைசா. இதைப்பார்த்த ரசிகர்கள், தாராளமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.