உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி, சிம்பு வழியில் அமலா பால்

ரஜினி, சிம்பு வழியில் அமலா பால்

நடிகை அமலா பால் புதிய படங்களில் நடிப்பதை காட்டிலும் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் இணையத்தில் இப்போதும் பேசு பெருளாக இருக்கிறார். விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி, அசரவைக்கும் யோகாசன புகைப்படங்களையும் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

சமீபகாலமாக ஆண்மிகத்திலும் அதிக ஈடுபாடு காட்டி வரும் அமலா தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வழக்கம் போலவே இந்த புகைப்படங்களும் லைக்குகளை குவித்து வருகிறது.

ஆண்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரான நடிகர் ரஜினி அடிக்கடி இமயமலை சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சமீபகாலமாக நடிகர் சிம்புவும் இமயமலை சென்று வருகிறார். தற்போது இந்த பட்டியலில் அமலா பாலும் இணைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !