ரஜினி, தனுசுக்கு ஒரே நாளில் விருது
ADDED : 1650 days ago
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக அவரது மருமகனான தனுசுக்கு அசுரன் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 67ஆவது தேசிய விருது வழங்கும் விழா மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அதோடு, தேசிய விருது வழங்கப்படும் அன்றைய தினமே ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் ரஜினி, தனுஷ் இருவருக்கும் ஒரே நாளில் விருது வழங்கப்பட உள்ளது. அதிலும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரண்டு பேர் ஒரே நாளில் உயரிய விருதுகளை பெறப்போகிறார்கள்.