ராபின்ஹூட் வேடத்திற்காக பவன் கல்யாணுக்கு பயிற்சி
ADDED : 1649 days ago
அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்து முடித்து விட்ட பவன்கல்யாண் அடுத்தபடியாக கிரிஷ் இயக்கும் ஹரி ஹரா வீரமல்லு என்ற படத்தில் நடிக்கிறார். இதற்காக தற்காப்பு கலை பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். பவன்கல்யாண் ஏற்கனவே சில தற்காப்பு கலைகளை பயிற்சி எடுத்தவர். அதை தனது கடந்தகால படங்களிலும் அவர் வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இப்போது ஹரி ஹரா வீரமல்லு என்ற இந்த பீரியட் படத்தில் அவர் ராபின் ஹூட் வேடத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்திற்காக தற்காப்பு கலைகளுடன் கூடிய சண்டை பயிற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். அப்படி பவன்கல்யாண் பயிற்சி எடுத்து வரும் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.