உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்குப் படம் : ஷங்கர் மீது அடுத்த வழக்கு ?

தெலுங்குப் படம் : ஷங்கர் மீது அடுத்த வழக்கு ?

தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குனர் எனப் பெயரெடுத்த ஷங்கர் மீது சமீபத்தில் அவர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது.

'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் அவர் அடுத்து இயக்க உள்ள தெலுங்குப் படத்தை இயக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியது. ஆனால், ஷங்கர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் அவர் மீது தடை விதிக்க முடியாதென நீதிமன்றம் கூறிவிட்டது.

இதனிடையே, ஷங்கர் அடுத்து இயக்க உள்ள தெலுங்குப் படம் குறித்து தமிழ்த் திரையுலகின் சீனியர் தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரி வழக்கு தொடுக்கத் தயாராக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்க உள்ள தெலுங்குப் படத்தின் கதை தன்னுடையது என சின்னச்சாமி என்பவர் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை ஷங்கருக்கு அனுப்பியுள்ளாராம். சின்னச்சாமி சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சௌத்ரியிடம் பணிபுரிபவராம்.

'இந்தியன் 2' வழக்கு விவகாரம் பற்றியே எந்த வித அறிக்கையும் விடாத ஷங்கர் இதையும் கண்டுகொள்வாரா என்பது சந்தேகம்தான் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !